பல்லவ வம்ச காடவராய கோப்பெருஞ்சிங்கன் / வன்னியர் குல திலகம் / Vanniyar History
வன்னியர் குல திலகம்
பல்லவ வழி வந்த
காடவர் குல தலைவன் கோப்பெருஞ்சிங்கன்
வரலாற்றில் மறைக்கப்பட்ட
மாபெரும் தமிழ் மன்னன் "கோப்பெருஞ்சிங்கன் "
இவர் "காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் " என்று அழைக்க படும் பிற்கால பல்லவ அரசன் ஆவார் .
இவர் கி.பி. 1229 முதல் 1278 வரை இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் (கடலூர் - விழுப்புரம் ) பகுதியில் உள்ள சேர்ந்தமங்கலம் என்னும் ஊரை தலைமையாக கொண்டு ஆட்சி புரிந்தவர் .
மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளை திருமணம் செய்தவர் தான் பல்லவ குல பாரிஜாதன் காடவகோப்பெருசிங்கன் ஆவார்.
பள்ளி குல காடவராய கோப்பெருசிங்கப் பல்லவனுக்கு, சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், "மாமன்" மற்றும் மருமகன் உறவுமுறை ஆகும்.
அரசர்கள் எப்போதும் அரச மரபினர் உடன் தான் திருமண பந்தம் கொள்வார்கள்.
எனவே இதன் மூலம் சோழர்களும் பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதை தெளிவாக அறிய முடியும்.
காடவர் போர்செயல்
==================
பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் அஞ்சா நெஞ்சமும், அடங்கா வீரமும் கொண்ட அரசன் என்பதை அவர் போர் வரலாற்றை கொண்டே அறியலாம்.
காடவராயர் என்ற பட்டமனது பல்லவ வம்சா வழியினர் ஆன வன்னியர்களுக்கு மட்டுமே உரியது ஆகும்.
மூன்றாம் ராஜராஜசோழன் பாண்டியர்களின் படையை எதிர் கொள்ள போசளமன்னனான வீர நரசிமமன் ஆதரவை நாடிச்சென்றபோது இடையில் வழிமறித்து வந்தவாசி வட்டத்திலுள்ள தெள்ளாறு என்ற இடத்தில் கி.பி1231 ல் கோப்பெருஞ்சிங்கன் தன்படையுடன் வந்து 3ம் ராஜராஜசோழனைப் போரில் தோற்கடித்து அவரைத் தனது தலைநகரான சேந்தமங்கலத்தில் ஏறத்தாழ முப்பது நாள்களுக்கு மேலாக தன்னுடைய கோட்டைச் சிறையிலடைத்தான்.
(கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனின் மருமகன் என்பது குறிப்பிட தக்கது)
சிறையில் அடைக்கப்பட்ட செய்தி
அறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் கெடிலம் நதிக்கரையிலுள்ள அனைத்து ஊர்களையும் பேரழிவிற்கு உள்ளாக்கியும்,கொள்ளையிட்டும் சேந்தமங்கலத்தை பேரழிவிற்குள்ளாக்கினான்.
இதனைக் கண்ட கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை விடுவித்து ஆட்சியை விட்டுத்தருவதாக அறிவித்தான்.
இச்செய்தியை திருவந்திபுரம் கல்வெட்டு மூலம் அறியலாம்.மீண்டும் ராஜராஜனின் ஆட்சிக்குட்பட்டு ஆண்டுவந்தான்.
கி.பி 1253 ல் பெரம்பலூர் எனுமிடத்தில் போசளருடன் போர்புரிந்து அவர்களை வென்றான்.
கி.பி 1255 ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேந்தமங்கலம் கோட்டையை முற்றுகையிட்டான்.இதன்பின் இருவரும் நட்பு உடன்படிக்கை செய்துகொண்டு ஆட்சியை மீண்டும் கோப்பெருஞ்சிங்கனிடம் ஒப்படைத்தான்.
ஆனால் கி.பி 1279ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் சோழ நாடு,திருமுனைப்பட்டி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த்ததின் மூலம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி முடிவுற்றது.
இறைப்பணி :
சேந்த மங்கலம் வானிலை கண்டீஸ்வரர் ஆலயம் இவரால் அமைக்கபட்டது.
போரில் தான் பெற்ற வெற்றியை முன்னிட்டு அவன் இந்த சிவன் கோவிலை அமைத்தார்.
இந்த ஆலயத்தின் கிழக்கே கரிக்காலமர்ந்தம்மன், மேற்கே மழையம்மன், வடக்கே காட்டு மழையம்மன், தெற்கே துர்க்கையம்மன் ஆகியோருக் கும் ஆலயம் அமைத்திருக் கிறான் கோப்பெருஞ்சிங்கன்.
கி.பி. 1248-ல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தெற்கு கோபுரத்தை உருவாக்கிய இந்த மன்னன், 1262-ல் சிதம்பரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள தில்லைக்காளி கோவிலையும் அமைத்தான் என்பர். திருவெண்ணெய் நல்லூர் பெருமாள் ஆலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்த இவன், திருவண்ணாமலையாருக்கு பத்து ஏக்கர் நிலமும், பொன்னாலான விளக்கையும் காணிக்கையாக்கியுள்ளான்.
மேலும் திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கு நூறு கழஞ்சு பொன்னும், விருத்தாச்சலம் பழமலைநாதர் ஆலயத்துக்கு திருமண மண்டபமும் கட்டிக்கொடுத்து திருப்பணி செய்துள்ளான்.
திருநறுங்குன்றம் என்னும் ஊரிலுள்ள மலையில் அப்பாண்டநாதர் கோவில் என்னும் சமண சமய ஆலயம் உள்ளது. அதற்கும் இந்த மன்னன் உதவி செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆதனூரில் பெருமாளுக்கும் சிவனுக்கும் அருகருகே ஆலயம் அமைத்து தீவிர சமயப் பணி ஆற்றியுள்ளான் கோப்பெருஞ்சிங்கன்.
சேந்தமங்கலம் சிவாலயத்திலுள்ள வானிலை கண்டீஸ்வரர் ஆபத்சகாயேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கோப்பெருஞ்சிங்கனை பல ஆபத்துகளிலிருந்து காத்ததால் ஈசனுக்கு இப்பெயர் அமைந்ததென்பர். தற்போதும் தன்னை நாடிவரும் பக்தர்களின் ஆபத்துகளை நீக்கி திருவருள் புரிகிறார் இத்தலத்து சிவபெருமான். அம்மன் பிரகன் நாயகி என்னும் பெயரில் அருள்புரிகிறா
இவரின் வாரிசுகள் இன்றும் தென்னார்க்காட்டு பகுதியில் "கச்சிராயர் " பட்டம் பூண்டு ராஜவம்சமாக வாழ்கின்றனர் கச்சி என்பது காஞ்சியை குறிக்கும் . காஞ்சியை ஆண்ட பல்லவ வம்சத்தினர் என்பதை குறிக்கும் பொருட்டு இவர்கள் கச்சிராயர்கள் என்று அழைக்க படுகின்றனர் .
விருத்தாசலம் பகுதியில் உள்ள வன்னியர்களான
"பரூர் கச்சிராயர்கள் ", என்ற
பட்டத்தோடு காடவன் வழி வந்தோர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்
இவர் ஆட்சி செய்த "சேர்ந்தமங்கலம்" பகுதியில் உள்ள கோவிலில் (ஆபத்து சகாயீஸ்வரர் கோவில்) சிறப்பு அன்னதானமும் பூஜைகளும், கச்சிராயர்களின் தலைமையில் சிறப்புடன் நடைபெறுகிறது

Comments
Post a Comment