சம்புவராயர் வன்னியர் / sambuvarayar vanniyar

சம்புவராய மன்னர்கள்





   திருவண்ணாமலை  மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் ஆகும்.

சம்பு + அரையர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.

சம்பு முனிவரின் யாகத்தின் வழி வந்தவர்கள் தான் வன்னியர்கள்.

சோழர் காலத்திய மன்னர்களான சம்புவராயர்,காடவராயர் போன்றோர் வன்னிய இனத்தவர்.இதனை வரலாற்றுத் துறை உறுதிப்படுத்தியும் உள்ளது.

வன்னிய இனத்தவர் மன்னர்களாகவும் ,படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்துள்ளனர்.

கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன. உதாரணத்திற்கு

"ஓய்மாநாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன்"
இக்கல்வெட்டு வாசகம் பள்ளி(வன்னியர்) இனத்தவனான ராஜேந்திர சோழச் சம்புவராயனைக் குறிப்பிடுகிறது.

ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனப் பகுதியை உள்ளடக்கியது. நாலாயிரவன் என்பது நாலாயிரம் வீரர்களைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது.

இந்த சம்புவராயன் நாலாயிரம் வீரர்களுக்குத் தலைவன் என்பதையே இக்கல்வெட்டு வாசகம் உணர்த்துகிறது. சம்புவராயர்கள் மன்னர்களாகவும் இருந்தது வரலாறு.

ராஜகம்பீர சம்புவராயர் -
 கிபி 1236 - 1268

மண்கொண்ட சம்புவராயர் - 
கி பி 1322 - 1337

ராஜநாராயண சம்புவராயர் - 
கிபி 1337 - 1373

மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயர் - 
கிபி 1356 - 1375











சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)

இவனுக்குப் பிறகு அறியப்படும் குறுநிலத்தலைவன் செங்கேணி சாத்த நாலாயிரவன் எனும் கரிகாலச்சோழ நாடாள்வான்:இவனது கல்வெட்டுக்கள் திண்டிவனப் பகுதியான கிடங்கலில் காணப் பெறுகிறது.இவன் சோழ மன்னரான அதி ராஜேந்திரன் காலத்தில் குறுநில மன்னனாக் ஆட்சி செய்தவன்.(ARSIE,1902,no.227, S.I.I.Vol 7, No. 854)


சம்புவராய மன்னனாகிய ஓய்மா நாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திர சோழ சம்புவராயன் என்பான் கி.பி 1128 வாக்கில் ஆட்சி செய்த குறு நில மன்னனாவான். இக்குறு நில மன்னனின் பத்து கல்வெட்டுகள் கி.பி 1123 ஆம் ஆண்டு முதல் கி.பி 1174 ஆம் ஆண்டு முடிய எழுதப் பெற்றிருக்கின்றன.

வேலூர் மாவட்டம் திருவல்லம்(ARE 232 of 1921),வாயலூர் (ARE 422 of 1922), காஞ்சி மாவட்டம் மதுராந்தகம்(ARE 400 of 1922), திருவண்ணாமலை மாவட்டம் சீயமங்கலம்(ARE 63 of 1900),மடம்(ARE 234 of 1919, 238 of 1919, 252 of 1919 and 100 of 1939-1940),தேவனூர்(ARE 298 of 1929 and 302 of 1929),திருக்கழுக்குன்றம்(ARE 126 of 1932-33) ஆகிய இடங்களில் இவ்வரசனுடைய பத்து கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

இந்த சம்புவராய மன்னர்கள் பள்ளி குலத்தவர் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் படுகின்றனர். இவர்கள் சுந்தரச் சோழன் ஆட்சி காலம் முதல் விஜய நகர வேந்தர் படையெடுப்பு வரை தொடர்ந்து தொண்டை மண்டலப் பகுதி ஆட்சியாளர்களாகவும் , குறு நில மன்னர்களாகவும் விளங்கினர். விஜய நகர வேந்தர் படையெடுப்பின் போது முழுவுரிமை பெற்ற மன்னர்களாய் விளங்கினர்.

இம்மன்னர்கள் கல்வெட்டுக்கள் மூலம் இவர்கள் பள்ளி குலத்தவர் என்பதை அறியலாம்.தமிழக வரலாற்றாசிரியர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். சம்புவராயர் குறித்த வரலாற்று நூல்களும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இவர்கள் வன்னியர்(பள்ளி) குலத்தவர் என்று கூறுகின்றன.
சம்புவராய மன்னர்கள் வன்னியர் குலத்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

சோழர் காலத்தில் அவர் சிற்றரசராய் தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தோர் வன்னியரே என்பது உறுதி.

சம்புவராயர்கள்
கி.பி.1340
சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராசராசசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராசகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.
 
   கி.பி.14இந்த நூற்றாண்டின் துவக்கத்தில்  ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".


Comments

  1. நன்றி 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Where is in those inscriptions said Sambuvaraya or Cholaswere vanniyaa caste?

    ReplyDelete
    Replies
    1. Reference given over there ,stating South Indian inscription..

      Delete
    2. venkateswarlu lavada full'la padida.

      Delete
    3. சாம்பவர்கள் பறையர்கள் பள்ளி என்றால் வன்னியர்கள் அப்போ எல்லாம் ஒன்றாக இருந்தார்கள் போல

      Delete
  3. சம்பு முனிவர் யாகம் போன்ற கற்பனைகளை தவிர்க்கலாம்..

    ReplyDelete
  4. சிவன்🔱, ருத்திரன்🔱 என்று அழைக்கப்படும் வீர ருத்திர🔱 வன்னியர் சம்பு🔱 வன்னியர் மற்றும் சம்பு🔱முன்னிவர் இந்த பெயர்கள் பறையர்🔱பெயர்

    ReplyDelete
    Replies
    1. சம்புவராயர்கள் பறையர்கள் ஆனால் அதையும் ஆட்டைய போட பார்க்கிறார்கள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

பல்லவ வம்ச காடவராய கோப்பெருஞ்சிங்கன் / வன்னியர் குல திலகம் / Vanniyar History

வன்னியர் வரலாறு Real Vanniyar History vanniyar history