Posts

பல்லவ வம்ச காடவராய கோப்பெருஞ்சிங்கன் / வன்னியர் குல திலகம் / Vanniyar History

Image
வன்னியர் குல திலகம் பல்லவ வழி வந்த காடவர் குல தலைவன் கோப்பெருஞ்சிங்கன்   வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் தமிழ் மன்னன்       "கோப்பெருஞ்சிங்கன் " இவர் "காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் " என்று அழைக்க படும் பிற்கால பல்லவ அரசன் ஆவார் . இவர் கி.பி. 1229 முதல் 1278 வரை இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் (கடலூர் - விழுப்புரம் ) பகுதியில் உள்ள சேர்ந்தமங்கலம் என்னும் ஊரை தலைமையாக கொண்டு ஆட்சி புரிந்தவர் .     மூன்றாம் குலோத்துங்கச்  சோழனின் மகளை திருமணம்  செய்தவர் தான் பல்லவ குல பாரிஜாதன் காடவகோப்பெருசிங்கன் ஆவார்.   பள்ளி குல காடவராய கோப்பெருசிங்கப் பல்லவனுக்கு, சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், "மாமன்" மற்றும் மருமகன் உறவுமுறை ஆகும்.    அரசர்கள் எப்போதும் அரச மரபினர் உடன் தான் திருமண பந்தம்    கொள்வார்கள். எனவே இதன்  மூலம்  சோழர்களும் பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதை தெளிவாக அறிய முடியும். காடவர்  போர்செயல் ==================       பல்லவ மன்னன்...

சம்புவராயர் வன்னியர் / sambuvarayar vanniyar

Image
சம்புவராய மன்னர்கள்    திருவண்ணாமலை  மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் ஆகும். சம்பு + அரையர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள். சம்பு முனிவரின் யாகத்தின் வழி வந்தவர்கள் தான் வன்னியர்கள். சோழர் காலத்திய மன்னர்களான சம்புவராயர்,காடவராயர் போன்றோர் வன்னிய இனத்தவர்.இதனை வரலாற்றுத் துறை உறுதிப்படுத்தியும் உள்ளது. வன்னிய இனத்தவர் மன்னர்களாகவும் ,படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் இருந்துள்ளனர். கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன. உதாரணத்திற்கு "ஓய்மாநாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் எனும் ராஜேந்திரசோழ சம்புவராயன்" இக்கல்வெட்டு வாசகம் பள்ளி(வன்னியர்) இனத்தவனான ராஜேந்திர சோழச் சம்புவராயனைக் குறிப்பிடுகிறது. ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனப் பகுதியை உள்ளடக்கியது. நாலாயிரவன் என்பது நாலாயிரம் வீரர்களைக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது. இந்த சம்புவராயன் நாலாயிரம் வீரர்களுக்குத் தலைவன் என்பதையே இக்கல்வெட்டு வாசகம் உணர்த்துகிறது. சம்புவராயர்கள் மன்னர்களாகவும் இருந்தது வரலாறு. ராஜகம்பீர சம்ப...

வன்னியர் வரலாறு Real Vanniyar History vanniyar history

வன்னியர் புராணம் :           உலகில் புராணம் கொண்ட ஒரே இனம் வன்னியர் இனம் மட்டுமே . வன்னியர் புராணம் என்பது ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராஜாவின் தோற்றத்தை பற்றி கூறும் நூல் . இந்த ருத்ர வன்னியரின் வழி வந்தவர்களையே வன்னியர் என்கிறோம் .  இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில்  சைவ ஸ்ரீ வீர பிள்ளை அவர்களால் எழுத பெற்றது .சமஸ்கிருத நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்க பட்டது .இந்நூல் ஹிந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும் .இந்த புராணத்தில் வரும் அனைத்து செய்திகளும் சீர்காழியின் அருகே உள்ள வைதீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது .  ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராஜா, சம்பு மகரிஷி நடத்திய யாகத்தில் பிறந்ததை பற்றி கூறுவதால் இந்நூலை சம்பு மைந்தர் காப்பியம் என்றும் அல்லது வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது . வன்னி என்றால் அக்னி எனப் பொருள் படும் . இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில்  சைவ ஸ்ரீ வீர பிள்ளை அவர்களால் எழுத பெற்றது .சமஸ்கிருத நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்...